4 % வாக்கு வித்தியாசம் ஆட்சியையே மாற்றும்…! விஜய்யின் தவெக-வுக்கு 23% வாக்குகள்…!! சர்வேயில் வெளியான அதிர்ச்சித் தகவல்…!!

By Devi Ramu on சித்திரை 21, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தினமலர் மற்றும் சாணக்யா இணைந்து நடத்திய இறுதிவட்டக் கருத்துக்கணிப்பு முடிவுகளை ரங்கராஜ் பாண்டே வெளியிட்டுள்ளார். இந்த ஆய்வின்படி, ஆளும் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவினாலும், சுமார் 4 சதவீத வாக்கு வித்தியாசத்தில் அதிமுக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணிக்கு 36 சதவீதமும், திமுக கூட்டணிக்கு 32 சதவீதமும் வாக்குகள் கிடைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாகக் களம் கண்டுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 23 சதவீத வாக்குகளைப் பெற்று பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுதி வாரியான நிலவரப்படி, திமுக கூட்டணி 103 இடங்களிலும், அதிமுக கூட்டணி 102 இடங்களிலும் முன்னிலை வகிக்கக்கூடும் என்றும், சுமார் 29 தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்க முடியாத அளவிற்கு இழுபறி நீடிப்பதாகவும் பாண்டே குறிப்பிட்டுள்ளார். கடந்த 2021 தேர்தலை விட திமுகவின் பலம் குறையும் என்றும், அதே சமயம் அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்றும் இந்த சர்வே கூறுகிறது. நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் ஓயவுள்ள நிலையில், வேட்பாளர்களிடையே நிலவும் இந்த நெருக்கமான போட்டி தேர்தல் களத்தில் பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.