எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (LIC HFL) நிறுவனத்தில் 180 இளநிலை உதவியாளர் (Junior Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 21 இடங்கள் காலியாக உள்ளன. ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்ற 21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்குக் கணினி அறிவு இருப்பது அவசியமாகும்; மேலும் அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் நகரத்தைப் பொறுத்து மாதம் சுமார் 38,000 முதல் 41,500 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும். ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்; தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட ஆறு இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தகுதியுள்ளவர்கள் ஏப்ரல் 30, 2026-க்குள் எல்.ஐ.சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 800 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும், அதேசமயம் எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
