இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த பிராண்ட் மதுபானத்தை அருந்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘டிஸ்கவரி லிக்கர் வேர்ஹவுஸ்’ என்ற கடைக்குச் சென்ற அவர், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தனது ‘ட்ரீம் பெல்’ (Dream Bell) பிராண்ட் பாட்டில் ஒன்றை எடுத்து கேமரா முன்னிலையில் குடிப்பது போல் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. ஒரு சர்வதேசப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர் பொது இடத்தில் மது அருந்துவதா என இணையவாசிகள் பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கியதால் இந்த வீடியோ வைரலானது.
இருப்பினும், அந்த வைரல் வீடியோவின் பின்னணியில் உள்ள உண்மையை ஆராய்ந்தபோது, பீட்டர்சன் உண்மையில் மது அருந்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. அவர் கையில் வைத்திருந்த மதுபான பாட்டில் திறக்கப்படாமலேயே (Unopened bottle) இருந்தது. அவர் விளம்பர நோக்கத்திற்காக அல்லது ஒரு ஜாலியான பதிவிற்காக அந்தப் பாட்டிலைக் குடிப்பது போல் பாவனை மட்டுமே செய்துள்ளார். பாட்டிலின் மூடி உடைக்கப்படாமல் அப்படியே இருப்பதை உன்னிப்பாகக் கவனித்தவர்கள், அவர் மது அருந்தவில்லை என்பதை உறுதிப்படுத்தி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
கெவின் பீட்டர்சனின் ‘ட்ரீம் பெல்’ மதுபானம் 2024-ல் ஸ்காட்லாந்தில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுவதாகும். முதலில் மகாராஷ்டிராவில் அறிமுகமான இந்த பிராண்ட், தற்போது வட இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஐபிஎல் 2026-ல் வர்ணனையாளராகப் பணியாற்றி வரும் பீட்டர்சன், தில்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வழிகாட்டி பொறுப்பில் இருந்து விலகி முழுநேர வர்ணனையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kevin Pietersen visited a liquor shop in Gurugram to promote his own brand and also purchased one of his favorite bottles.
Later on, he started drinking. 😭 pic.twitter.com/PAOpeUvxam
— Sonu (@Cricket_live247) April 15, 2026
