இந்தியர்களைப் பற்றி இப்படி நினைத்தேனே… மும்பையில் கண்ணீர் விட்ட பாகிஸ்தானிய பெண்… வைரலாகும் இந்தியாவின் உபசரிப்பு..!!!

By Rajeshwari on சித்திரை 14, 2026

Spread the love

லண்டனில் இருந்து நேபாளத்திற்கு மும்பை வழியாகப் பயணம் செய்த ஒரு பாகிஸ்தானியப் பெண், மும்பை விமான நிலையத்தில் தனக்குக் கிடைத்த மறக்க முடியாத உபசரிப்பு குறித்துப் பகிர்ந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பு பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் தனது பாகிஸ்தானிய குடியுரிமை குறித்து அவர் மிகுந்த அச்சத்தில் இருந்துள்ளார்.

ஆனால், மும்பை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவரிடம் காட்டிய கனிவான அணுகுமுறையும், உதவியும் அவரது பயத்தைப் போக்கியது மட்டுமல்லாமல், இந்திய விருந்தோம்பலின் மீதான அவரது பார்வையை முற்றிலும் மாற்றியுள்ளது.

   

 

View this post on Instagram

 

A post shared by Wanzipa (@wanzipa)

   

“>

 

மேலும் தனது 10 மணி நேர இடைநிறுத்தத்தின் போது, பாதுகாப்பு சோதனையில் அவரது பையில் இருந்த பவர் பேங்க் தொடர்பாக அதிகாரிகள் அழைத்தபோது அவர் சற்று பதற்றமடைந்துள்ளார். இருப்பினும், அதிகாரிகள் மிகவும் கண்ணியமான முறையில் அந்தச் சிக்கலைத் தீர்த்து வைத்தது அவருக்கு நிம்மதியளித்தது.

இதனால் விமான நிலைய முனையத்தில் அவர் கழித்த நேரம் மிகவும் பாதுகாப்பாகவும் இனிமையாகவும் இருந்ததாகக் குறிப்பிட்ட அந்தப் பெண், இந்தியர்களின் அன்பான உபசரிப்பிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். இணையதளங்களில் வைரலாகும் இந்த வீடியோ, இரு நாட்டு மக்களிடையேயான மனிதாபிமானத்தையும் நல்லுறவையும் வெளிப்படுத்துவதாக பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.