கார் டிரைவருடன் கள்ளக்காதல்… குழந்தையை அனாதை இல்லத்தில் விட்டுவிட்டு… கணவனைக் கொல்ல ஸ்கெட்ச் போட்ட வங்கி அதிகாரி மனைவி… “50 லட்சம் கொடு, இல்லையேல் பிணமாவாய்” வெளியான பகீர் ஆடியோ ..!!

By Soundarya on சித்திரை 14, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரைச் சேர்ந்த கர்ணவ் கத்ரி என்ற வங்கி அதிகாரிக்கும், அர்ச்சனா என்பவருக்கும் கடந்த 2018-ல் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜெய்ப்பூரில் பணியாற்றி வரும் தனது கணவரைப் பார்க்க அர்ச்சனா அடிக்கடி கால் டாக்ஸியில் சென்று வந்துள்ளார். அப்போது கார் ஓட்டுநர் ரிஷப் சர்மா என்பவருடன் அர்ச்சனாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. காதலனுடன் சேருவதற்காக, கடந்த செப்டம்பர் மாதம் நகைகள் மற்றும் ₹5 லட்சம் பணத்துடன் தனது இளைய மகனை மட்டும் கூட்டிக்கொண்டு அர்ச்சனா தலைமறைவானார்.

தனது மனைவியைக் காணவில்லை என கர்ணவ் போலீசில் புகார் அளித்தபோது, அர்ச்சனா பேசிய அதிர்ச்சியூட்டும் ஆடியோ ஒன்றையும் சமர்ப்பித்தார். அதில், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்ய அர்ச்சனா திட்டம் தீட்டியது அம்பலமானது. கணவரை காரில் அழைத்துச் செல்லும்போதே அவரைத் தீர்த்துக்கட்ட அவர்கள் சதி செய்துள்ளனர். இந்தத் திட்டத்தைக் கேட்டு காவல்துறையினரே மிரண்டு போயுள்ளனர்.

   

கணவனைக் கொல்லச் சதி செய்தது மட்டுமின்றி, அவருக்கு மிரட்டல் கடிதம் ஒன்றையும் அர்ச்சனா அனுப்பியுள்ளார். அதில், தனக்கு ₹50 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றும், தவறினால் கணவனையும் அவரது தாயையும் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். மேலும், குழந்தைகளை அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு காதலனுடன் வாழப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புகாரை அடுத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், அர்ச்சனா மற்றும் அவரது காதலன் ரிஷப் சர்மாவை அதிரடியாகக் கைது செய்தனர்.