பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர், தனது மகளை விடக் குறைந்த வயதுடைய 19 வயது இளம் பெண்ணைக் காதல் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில், தனது கணவரைப் பிரிந்து இந்த முதியவருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வயதில் இவ்வளவு பெரிய வித்தியாசம் இருந்தபோதிலும், இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலிப்பதாகக் கூறுகின்றனர்.
கிராமத்தில் உள்ள ஒரு வயல்வெளியில் இருவரும் ரகசியமாகச் சந்தித்துக் கொண்டபோது, அங்கிருந்த கிராம மக்கள் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்தனர். இருவருக்கும் இடையே இருந்த தொடர்பை அறிந்த கிராமத்தினர், அங்கேயே வைத்து அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர். “வயது என்பது வெறும் இலக்கம்தான், காதல் என்பது இதயத் துடிப்பு; நாங்கள் இணைந்தே வாழ்வோம், இணைந்தே சாவோம்” என்று அந்த ஜோடி உருக்கமாகத் தெரிவித்துள்ளது.
இந்தத் திருமணத்திற்குப் பிறகு தங்களுக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கருதிய அந்த ஜோடி, பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. நீதிமன்றத்தில் பேசிய அந்த இளம்பெண், “அவருடைய மடியில் தலைவைத்துத் தூங்குவதையே நான் விரும்புகிறேன்” என்று தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் இந்த விநோத காதல் கதை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
