நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே இணையதளத்தில் ஹெச்.டி தரத்தில் கசிந்தது ஒட்டுமொத்தத் திரைத்துறையையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லீக் ஆன காட்சிகளில் ‘எடிட்’ என்ற வாட்டர்மார்க் இருந்ததால், படத்தொகுப்பு குழுவின் மீது பலத்த சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து மௌனம் கலைத்துள்ள படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ், படத்தின் இறுதிக்கட்டப் பணிகளான சவுண்ட் மிக்ஸிங் மற்றும் சிஜி வேலைகளுக்காக, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் அனுமதியுடன் ஜனவரி 14-ம் தேதி அன்னபூர்ணா ஸ்டுடியோவிற்கு படத்தின் நகல் அனுப்பப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் பிரதீப் ராகவின் இந்த அதிரடி விளக்கத்தைத் தொடர்ந்து, படம் எடிட்டிங் அறையிலிருந்து கசியவில்லை என்பதும், ஸ்டுடியோவில் இருந்துதான் கசிந்திருக்க வாய்ப்புள்ளது என்பதும் ஓரளவிற்கு உறுதியாகியுள்ளது. தற்போது காவல்துறையினர் மற்றும் படக்குழுவினர் அன்னபூர்ணா ஸ்டுடியோவை மையமாக வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவரகள் ஒரு உச்ச நட்சத்திரத்தின் படம் இவ்வளவு பெரிய தொழில்நுட்பப் பாதுகாப்பையும் மீறி கசிந்தது, தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, மற்ற தயாரிப்பாளர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
