கொய்யா பழத்தைப் போலவே அதன் இலைகளும் அளப்பரிய மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக, வெறும் வயிற்றில் கொய்யா இலைகளை மென்று சாப்பிடுவது வாய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது; இது ஈறு வீக்கம், பல் வலி மற்றும் வாயில் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.
மேலும், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் செரிமான மண்டலத்தை சீராக்கி, அஜீரணக் கோளாறு மற்றும் வயிற்றுப்போக்கை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, சளி மற்றும் இருமல் போன்ற பருவக்கால நோய்களிலிருந்தும் உடலைப் பாதுகாக்கும் இயற்கை மருந்தாக கொய்யா இலைகள் திகழ்கின்றன.
இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு கொய்யா இலை ஒரு வரப்பிரசாதமாகும். இதிலுள்ள வேதிப்பொருட்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுவதோடு, உணவுக்குப் பிறகு ஏற்படும் சர்க்கரை உயர்வையும் தடுக்கின்றன. உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது மிகச்சிறந்த தீர்வாகும் ஏனெனில் கொய்யா இலைகள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைப்பதோடு, மாவுச்சத்து சர்க்கரையாக மாறுவதையும் தாமதப்படுத்துகின்றன.
இந்நிலையில் தொடர்ந்து கொய்யா இலைகளை மென்று வருவதன் மூலம் அல்லது தேநீராக உட்கொள்வதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு, பொலிவான சருமத்தையும் ஆரோக்கியமான கூந்தலையும் பெற முடியும்.
