BREAKING: நாம் தமிழர் கட்சியில் இணைந்த திமுகவின் முக்கிய புள்ளி… குஷியில் துள்ளிகுதிக்கும் சீமான்..!!

By Soundarya on சித்திரை 13, 2026

Spread the love

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி முன்னாள் தலைவரும், திமுக நகர செயலாளருமான ரெத்தினகுமார், திடீரென திமுகவிலிருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அவர் முறைப்படி தங்களை இணைத்துக் கொண்டனர். நீண்ட காலமாக திமுகவில் தீவிரமாக பணியாற்றி வந்த ஒரு முக்கிய நிர்வாகி, அக்கட்சியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

சங்கரன்கோவில் பகுதியில் செல்வாக்கு மிக்க நிர்வாகியாகக் கருதப்படும் ரெத்தினகுமாரின் இந்த விலகல், அந்தப் பகுதி திமுகவிற்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்டு நாம் தமிழர் கட்சி தனது கட்டமைப்பை வலுப்படுத்தி வரும் நிலையில், ஆளுங்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இணைவது மற்ற அரசியல் கட்சியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திடீர் அரசியல் மாற்றத்தால் சங்கரன்கோவில் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.