“1000 கோடி இருந்தும் நோ சொன்ன லீமா ரோஸ்?”… கதி கலங்கிப்போன எடப்பாடி… நடுங்க வைத்த அந்த ஒற்றை பதில்…!

By Nanthini on சித்திரை 13, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் அப்செட்டில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பூத் கமிட்டி மற்றும் கடைசி கட்ட பணப்பட்டுவாடா குறித்து மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, கட்சியின் தேர்தல் நிதி மற்றும் செலவுகளை யார் ஏற்பது என்பது குறித்த விவாதத்தின் போது, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியும், லால்குடி தொகுதி வேட்பாளருமான லீமா ரோஸ் வழங்க வேண்டிய நிதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லீமா ரோஸ், தமிழகத்தின் பெரும் கோடீஸ்வர வேட்பாளராக அறியப்படுகிறார். சுமார் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பைக் கொண்டுள்ள அவர், வேலுமணி மூலமாக அதிமுகவில் இணைந்தவர். கட்சியில் இணைந்தபோது, தான் போட்டியிடும் தொகுதி மட்டுமின்றி, அதிமுக போட்டியிடும் மேலும் 15 தொகுதிகளின் தேர்தல் செலவுகளையும் (தொகுதிக்கு 10 கோடி ரூபாய் வீதம்) தானே ஏற்றுக்கொள்வதாக லீமா ரோஸ் வாக்குறுதி அளித்திருந்தார். இந்த உறுதிமொழியை நம்பியே அவருக்கு லால்குடி தொகுதி ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

   

இந்தச் சூழலில், வாக்குறுதி அளித்த நிதியை எடப்பாடி பழனிசாமி கேட்டபோது, லீமா ரோஸ் சொன்ன பதில் எடப்பாடியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேற்கு வங்கத்திலிருந்து தமிழகத்திற்குப் பணத்தைக் கொண்டு வருவதில் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் அதிகமாக இருப்பதால், தற்போது பணத்தை எடுத்து வர முடியவில்லை என்று அவர் மழுப்பலாகக் கூறியுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த எடப்பாடி, “குறைந்தபட்சம் திருச்சி மாவட்டத் தொகுதிகளுக்காவது நிதி கொடுங்கள்” என்று வற்புறுத்தியும், “தற்போது சாத்தியமில்லை, தேர்தல் முடிந்ததும் செட்டில் செய்கிறேன்” என லீமா ரோஸ் கைவிரித்துவிட்டாராம்.

   

பணம் மற்றும் தேர்தல் மேலாண்மை விஷயத்தில் மிகவும் கறாராகச் செயல்படும் எடப்பாடி பழனிசாமியையே, லீமா ரோஸின் இந்தத் திடீர் பல்டி திக்குமுக்காட வைத்துள்ளது. தேர்தல் முடிந்து பணத்தைத் தருகிறேன் என்று அவர் கூறியிருப்பதை அதிமுக சீனியர்கள் யாரும் நம்பத் தயாராக இல்லை. கடைசி நேரத்தில் லீமா ரோஸ் கொடுத்த இந்த ‘ஷாக்’ காரணமாக, குறிப்பிட்ட அந்த 15 தொகுதிகளின் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் அதிமுக தலைமை தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.