பெங்களூரு அருகே உள்ள அவ்வேரஹள்ளியில், அண்டை வீட்டு வளர்ப்பு நாயை கொடூரமாகத் தாக்கிய கோபி என்பவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி, கோபியின் மனைவியைப் பார்த்து அந்த நாய் குறைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கோபி, மதுபோதையில் அண்டை வீட்டிற்குள் நுழைந்து, அங்கு கட்டப்பட்டிருந்த நாயை மரக்கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்த நாய், வாயிலுக்கு அருகிலேயே மயங்கி விழுந்தது. உடனடியாக மீட்கப்பட்ட அந்த நாய், கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளது.
Man Booked for Assault on Neighbour’s Pet Dog in Bengaluru
Bengaluru
In a shocking incident of animal cruelty, a man identified as Gopi allegedly assaulted his neighbour’s pet dog in Avverahalli on April 9. The attack reportedly followed an altercation after the #dog barked at… pic.twitter.com/Gvv8BJ3w46
— Yasir Mushtaq (@path2shah) April 13, 2026
“>
இந்தக் கொடூரமான தாக்குதல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக ஏப்ரல் 11-ஆம் தேதி அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மாதநாயக்கனஹள்ளி காவல்துறையினர் பாரதிய நியாய சன்ஹிதா, 2023-ன் கீழ் 325 மற்றும் 329 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாயில்லாப் பிராணிகள் மீதான இத்தகைய வன்முறைகளைக் கண்டனம் செய்துள்ள அவர்கள், குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
