“தவெக-வுக்கு ‘செக்’… 16 தொகுதிகளிலும் சபரீசன் நேரடி ‘ரெய்டு’.. 5 லட்சம் தொண்டர்களுடன் களமிறங்கிய திமுக”… ஏப்ரல் 23-ல் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்…!!!

By Muthu Mani on சித்திரை 13, 2026

Spread the love

சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளும் பாரம்பரியமாக தி.மு.க-வின் கோட்டையாகக் கருதப்படுகின்றன. கடந்த 2021 தேர்தலில் அனைத்துத் தொகுதிகளையும் தி.மு.க கைப்பற்றிய நிலையில், வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலிலும் அதே வெற்றியைத் தக்கவைக்க அக்கட்சி உறுதியாக உள்ளது. இருப்பினும், இந்த முறை வழக்கமான போட்டிகளுடன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) களம் கண்டுள்ளது தி.மு.க-வுக்கு ஒரு சவாலாகப் பார்க்கப்படுகிறது.

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியிலும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த் தி.நகரிலும், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்திலும் போட்டியிடுகின்றனர். இதுதவிர மயிலாப்பூர், எழும்பூர், சைதாப்பேட்டை என சென்னையின் முக்கியத் தொகுதிகளில் தவெக-வின் முன்னணி நிர்வாகிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் பட்சத்தில், அது மறைமுகமாக அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் தி.மு.க தரப்பில் எழுந்துள்ளது.

   

இந்தச் சூழலைச் சமாளிக்க, முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் களமிறக்கப்பட்டுள்ளார். அவர் சென்னையின் 16 தொகுதிகளையும் நேரடியாகக் கண்காணித்து, ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி வியூகங்களை வகுத்து வருகிறார். அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளைச் சமாதானப்படுத்துவது, தொகுதி வாரியாக நிலவும் கள நிலவரங்களை ஆய்வு செய்வது எனப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள சபரீசன், தேர்தல் வரை பிரசார யுக்திகளை அவ்வப்போது மாற்றியமைத்து வருகிறார்.

   

சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் தி.மு.க-வின் வெற்றியை உறுதி செய்ய, 75,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் சுமார் 5 லட்சம் இளைஞரணித் தொண்டர்களைச் சபரீசன் ஒருங்கிணைத்துள்ளார். இவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று வாக்குச் சேகரிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தவெக-வின் வருகையால் ஏற்பட்டுள்ள போட்டியை முறியடித்து, மீண்டும் சென்னையைத் தன்வசப்படுத்த தி.மு.க மேற்கொண்டு வரும் இந்தத் தீவிர முயற்சிகள் அரசியல் களத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.