சமூக வலைதளங்களில் தற்போது ஒரு சிறுவனுக்கும் கழுகிற்கும் இடையிலான அபூர்வமான நட்பு குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வானில் உயரமாகப் பறந்து கொண்டிருக்கும் ஒரு கழுகை சிறுவன் ஒருவன் அன்போடு அழைக்கிறான். பொதுவாகக் காட்டுயிர்கள் மனிதர்களிடம் நெருங்கத் தயங்கும் நிலையில், ஆச்சரியமாக அந்தப் பறவை சிறுவனின் அழைப்பிற்குச் செவிசாய்த்து, மெதுவாகக் கீழே இறங்கி வந்து அவனது கையில் அமர்கிறது.
View this post on Instagram
கண்களுக்குப் புலப்படாத ஒரு பிணைப்பு அந்தச் சிறுவனுக்கும் கழுகிற்கும் இடையே இருப்பதை இந்த வீடியோ காட்டுகிறது. எந்தவித பயமும் இன்றி சிறுவன் அழைக்க, கழுகும் அவனது நம்பிக்கையைப் புரிந்து கொண்டு மிகவும் நிதானமாக வந்து அமரும் காட்சி காண்போரைக் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே இருக்கும் ஆழமான தொடர்பையும் நம்பிக்கையையும் உணர்த்தும் இந்த நெகிழ்ச்சியான வீடியோ, தற்போது இணையவாசிகளின் மனங்களை வென்று வருகிறது.
