திமுகவுடன் கூட்டணி… இரவோடு இரவாக தவெகவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி… செம ஷாக்கில் விஜய்….!

By Nanthini on சித்திரை 13, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகக் கருதப்பட்ட அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி தற்போது கனிமொழி கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு (சீட்) மறுக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், திமுகவில் ஐக்கியமான பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெகவில் தனக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், உழைப்பிற்கு மதிப்பில்லை என்பதால் அங்கிருந்து வெளியேறியதாகவும் தெரிவித்தார்.

மேலும், சமூகநீதி மற்றும் மக்கள் நலனை முன்னிறுத்திச் செயல்படும் திமுகவில் இணைந்து இனிவரும் காலங்களில் முழுவீச்சில் கட்சிப் பணியாற்றப் போவதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்; இந்த திடீர் கட்சித் தாவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.