தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் (TMC) தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கான அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜே. ஜார்ஜ் இந்த அதிரடி முடிவை உறுதிப்படுத்தியதோடு, தவெக வேட்பாளர்களின் வெற்றிக்காக திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் இறங்கித் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
தேசிய அளவில் ‘இந்தியா’ (I.N.D.I.A) கூட்டணியில் அங்கம் வகிக்கும் மம்தா பானர்ஜியின் கட்சி, தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் போட்டியாகக் கருதப்படும் தவெகவுடன் கைகோர்த்திருப்பது முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளதோடு, வரும் தேர்தலில் புதியதொரு அரசியல் சமன்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது.
