ஒரு சவரன் தங்கம் ரூ.2 லட்சம்..? 1980-க்குப் பிறகு நிகழப்போகும் வரலாற்று உச்சம்… உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரின் அதிரடி கணிப்பால் மக்கள் பேரதிர்ச்சி..!!

By Soundarya on சித்திரை 11, 2026

Spread the love

அமெரிக்காவின் பிரபல பொருளாதார நிபுணர் பீட்டர் ஷிஃப், தங்கம் விலை குறித்து வெளியிட்டுள்ள அதிரடி கணிப்பு உலக முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் தங்கம் விலை சற்று சரிவைச் சந்தித்திருந்தாலும், ஏப்ரல் மாதம் முதல் அதன் மதிப்பு வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை நோக்கிப் பாயும் என்று அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச பொருளாதாரச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இந்த அதிரடி விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, 1980-ம் ஆண்டுக்குப் பிறகு தங்கம் சந்தையில் நிகழப்போகும் மிகப்பெரிய வரலாற்று மாற்றமாக இது இருக்கும் என்று பீட்டர் ஷிஃப் குறிப்பிட்டுள்ளார். அவரது கணிப்பின்படி, தங்கம் விலையானது ஒரு கிராம் ₹25,000 என்ற நிலையை எட்டக்கூடும் என்றும், ஒரு சவரன் தங்கம் சுமார் ₹2 லட்சம் வரை உயர்ந்து சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக மாற வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளார். இந்தத் தகவல், தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்களுக்கு லாபகரமாகத் தெரிந்தாலும், நகை வாங்குவோருக்குப் பெரும் கவலையை அளித்துள்ளது.