தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தேர்தல் பரப்புரைப் பயணங்களை அடுத்தடுத்து ரத்து செய்து வருவது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 6-ஆம் தேதி சென்னை தி.நகர் மற்றும் வில்லிவாக்கத்தில் நடைபெறவிருந்த பரப்புரைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று கடலூரில் நடைபெறவிருந்த நிகழ்வும் ரத்தானது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாளை கன்னியாகுமரியில் திட்டமிடப்பட்டிருந்த பரப்புரையும் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, ஏப்ரல் 13-ஆம் தேதி கும்மிடிப்பூண்டியில் நடைபெறவிருந்த பயணம் ஏப்ரல் 19-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அரசியல் களத்தில் தடம் பதிக்கத் துடிக்கும் தவெகவினருக்கு, விஜய்யின் இந்தத் தொடர் மாற்றங்கள் மிகுந்த ஏமாற்றத்தைத் தந்துள்ளதோடு, வரும் நாட்களில் தேர்தல் களம் எந்த திசையில் நகரும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
