கான்பூரில் தனது புகுந்த வீட்டைத் சொந்த வீடாகக் கருதி வந்த மருமகள் ஒருவருக்கு, அதே வீட்டில் நேர்ந்த கொடுமை மனிதநேயத்தின் எல்லைகளையேக் கடந்துவிட்டது. அந்தப் பெண்ணைத் தந்தை ஸ்தானத்தில் இருக்க வேண்டிய மாமனாரே ஈவுஇரக்கமின்றி தரதரவென இழுத்துச் சென்று அடித்தக் கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் ஒரு சட்டரீதியான குற்றம் என்பது ஒருபுறம் இருக்க, புனிதமான உறவுகளின் கண்ணியம் குறித்துப் பெரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. “என்னை அடிக்காதீர்கள், என்னை இங்கேயே இருக்க விடுங்கள்” என்று அந்தப் பெண் கதறி அழுதும், அவரது குரலை எவரும் செவிமடுக்காமல் அலட்சியப்படுத்தியதுதான் இந்தச் சம்பவத்தின் மிக வலிமிகுந்த பகுதியாகும்.
कानपुर में एक बहू, जो घर को अपना समझकर आई थी, उसी घर में उसके साथ हैवानियत की हदें पार कर दी गईं।
क्योंकि उसके ही ससुर द्वारा उसे घसीट-घसीट कर पीटा गया,
ये पीटना न सिर्फ कानूनन अपराध है, बल्कि रिश्तों की मर्यादा पर भी बड़ा सवाल है,
सबसे दर्दनाक बात ये है कि
वो चीखती रही कि… pic.twitter.com/CgfplX8zNW
— ʀᴜᴅʜʀᴀ ʏᴀᴅᴀᴠ🇮🇳 (@Rudhrayadav001) April 11, 2026
இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களில் வெறும் கண்டனத்தோடு நின்றுவிடாமல், குற்றவாளிகள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கையும் சமூக விழிப்புணர்வும் எடுக்கப்பட வேண்டியது அவசியம். அப்போதுதான், எந்தவொரு பெண்ணும் தனது சொந்த வீட்டிலேயே பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்ளும் அவலநிலை மாறக்கூடும்.
