“அப்பா கூடத் தான் போவேன்” அழுது அடம்பிடித்த சிறுவனை தாயுடன் அனுப்பிவைத்த நீதிமன்றம்… கொஞ்ச நாளிலேயே காத்திருந்த அதிர்ச்சி… “இவளுக்கு மரணதண்டனை கொடுங்க” கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

By Soundarya on சித்திரை 10, 2026

Spread the love

தந்தையுடன் வசிக்க ஆசைப்பட்ட 4 வயது சிறுவன் ஏஞ்சல் (Angel), நீதிமன்ற உத்தரவால் தாயிடம் ஒப்படைக்கப்பட்ட சில நாட்களிலேயே கொடூரமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தந்தை தன்னிடம் இருக்க வேண்டும் என்று சிறுவன் விரும்பிய போதிலும், நீதித்துறை அந்தச் சிறுவனை அவனது தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்தத் தவறான முடிவே அந்தப் பச்சிளம் உயிரின் மரணத்திற்கு வித்திட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகக் கூறி அந்தப் பெண் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தபோது, அவன் ஏற்கனவே உயிர் பிரிந்த நிலையில் இருந்தான். ஆனால், பிரேதப் பரிசோதனையில் அந்தச் சிறுவனின் தலையில் பலத்த உள் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

மிகவும் கொடூரமான விஷயம் என்னவென்றால், அந்தப் பெண் சிறுவனை உயிருக்கு ஆபத்தான நிலையில் (கோமா) அப்படியே போட்டுவிட்டு, நிம்மதியாகச் சென்று உறங்கியுள்ளார். அந்தப் பெண்ணின் இத்தகைய இரக்கமற்றச் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தச் சிறுவனின் மரணத்திற்கு காரணமான அந்த “பெண்மணி” தனது வாழ்நாள் முழுவதையும் சிறையிலேயே கழிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் மக்கள் கொந்தளித்து வருகின்றனர். சட்டமும் நீதியும் சில நேரங்களில் எத்தகைய விபரீத முடிவுகளைத் தருகின்றன என்பதற்கு இந்தச் சிறுவனின் மரணம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.