அமெரிக்காவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரான் நாடு ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கடலுக்கு அடியில் கண்ணிவெடிகளைப் பதித்திருக்கலாம் என்ற சந்தேகம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வரைபடம் ஒன்றை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
உலக நாடுகளின் கடல்வழிப் போக்குவரத்துப் பாதையில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் இந்தப் பகுதியில், இத்தகைய கண்ணிவெடிகள் வைக்கப்பட்டுள்ளது கப்பல் போக்குவரத்திற்குப் பெரும் அச்சத்தையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவல் சர்வதேச அரசியலில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளதோடு, ஒப்பந்தத்திற்குப் பிறகும் ஈரான் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுவது அதிர்ச்சியை அளிக்கிறது.
