பிரபல ‘கயல்’ சீரியல் நடிகை சுபாஷினியின் திடீர் மறைவு சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் வசித்து வரும் தனது கணவர் பிபின் சந்திராவுடன் வீடியோ காலில் பேசிய பிறகு அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், சுபாஷினியின் கணவர் சமூக வலைதளத்தில் “நீ இல்லாமல் நான் இல்லை” என உருக்கமாகப் பதிவிட்டுள்ள போதிலும், அவர் மீது ஒரு தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். சுபாஷினியின் மறைவு குறித்து அவரது சக நடிகை அபிநவ்யா பகிர்ந்த தகவல்கள் பலரையும் கலங்கச் செய்துள்ளன.
இதனால் சமீபத்தில் நடிகர் ரியாஸ் கான் வீட்டு விசேஷத்தில் சுபாஷினியும் அவர் கணவரும் ஒன்றாகக் கலந்து கொண்டதாகவும், அப்போது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் பொருத்தமான தம்பதிகளாகவே காணப்பட்டனர் என்றும் அபிநவ்யா தெரிவித்துள்ளார். சுபாஷினி தனது கணவரைப் பற்றி எப்போதும் தவறாகப் பேசியதில்லை என்றும், இவ்வளவு சந்தோஷமாக இருந்தவர் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பது புரியவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
