ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு விடுத்த அதிரடி உத்தரவு… மீண்டும் ஒரு உலகப்போரா?… வெளியுறவு அமைச்சகத்தின் அவசர எச்சரிக்கை..!!!

By Rajeshwari on சித்திரை 9, 2026

Spread the love

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்திய அரசு அங்குள்ள இந்தியர்களுக்கு அவசர அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. ஈரானில் தங்கியிருக்கும் இந்திய குடிமக்கள் உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் மற்றும் வான்வழித் தாக்குதல்களின் அச்சுறுத்தல் காரணமாக, இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரானுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் தங்களது பயணத்தைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

   

இதனால் காசா மற்றும் லெபனான் பகுதிகளில் நிலவும் போர்ச் சூழல் தற்போது ஈரான் வரை பரவியுள்ளதால், தூதரக சேவைகள் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கும் இத்தகைய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஈரானில் உள்ளவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.