கள்ளக்காதனுடன் வாழ்ந்து வந்த மனைவி… “அம்மாவோட இந்தச் செயல் பிடிக்கல”… கணவர் நடத்திய நள்ளிரவு வேட்டை… அருமனையை அதிரவைக்கும் சம்பவம்…!!!

By Muthu Mani on சித்திரை 8, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள ஈஞ்சகோடு பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவர், மதுப்பழக்கத்தால் தனது மனைவி லதாவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மனக்கசப்படைந்த லதா, தன்னுடன் ரப்பர் தோட்டத்தில் வேலை பார்த்த அஜி என்பவருடன் ஏற்பட்ட திருமணத்திற்கு மீறிய உறவால், தனது ஒரு மகனுடன் வீட்டை விட்டு வெளியேறி அருமனை அருகே காரோடு கிராமத்தில் அஜியுடன் குடும்பம் நடத்தி வந்தார். இதற்கிடையில், தாயின் செயல் பிடிக்காத மகன் மீண்டும் தந்தை ஜஸ்டினிடமே தஞ்சமடைந்தார்.

தன்னை பிரிந்து காதலனுடன் வாழ்ந்து வரும் மனைவி மீது கடும் ஆத்திரத்தில் இருந்த ஜஸ்டின், நேற்று முன்தினம் தனது நண்பர்கள் மூவருடன் லதா தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கும்பல், லதா மற்றும் அஜி ஆகிய இருவரையும் சரமாரியாகத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடியது. பலத்த காயமடைந்த இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் அஜி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

   

இந்தச்ம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த அருமனை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். தலைமறைவாக இருந்த ஜஸ்டினை நேற்று மாலை போலீசார் கைது செய்த நிலையில், தப்பியோடிய அவரது நண்பர்கள் மூவரையும் வலைவீசித் தேடி வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாக மனைவியையும் அவரது காதலனையும் கணவர் வீடு புகுந்து தாக்கிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.