தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் விதமாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் (கொமதேக) கொள்கை பரப்பு செயலாளர் அசோகன் அதிரடி முடிவை எடுத்துள்ளார். அவர் தனது பதவியைத் துறந்துவிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அசோகனுடன் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் அதிமுகவில் ஐக்கியமானது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில் அசோகன் மேற்கொண்டுள்ள இந்தத் தாவல், வட மாவட்டங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குப் பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, கொங்கு மற்றும் வட மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க ஒரு நிர்வாகி விலகுவது அதிமுகவிற்குப் கூடுதல் பலத்தைத் தந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த அதிரடி மாற்றத்தால் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இந்த விரிசல் திமுக தலைமையை யோசிக்க வைத்துள்ளது.
