மோனாலிசா கணவர் தாக்கப்பட்டாரா?… திருமணமான சில நாட்களிலேயே இப்படியா?… சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ…!!!

By Rajeshwari on சித்திரை 8, 2026

Spread the love

கும்பமேளா மூலம் புகழ்பெற்ற நடிகை மோனாலிசா போஸ்லேவின் கணவர் முகமது ஃபர்ஹான், ரத்தக் காயங்களுடன் சாலையில் நடந்து செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு என்ன நேர்ந்தது என ரசிகர்கள் கவலையடைந்த நிலையில், அந்த வீடியோவின் பின்னணியில் உள்ள உண்மை தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் உண்மையில், அந்த வீடியோ நிஜமான தாக்குதல் அல்ல, அது ஒரு ஆல்பம் பாடலின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட காட்சியாகும். இந்தத் தகவலை நடிகை மோனாலிசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உறுதிப்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில் கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்றுக்கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தால் வைரலான மோனாலிசா, தற்போது தென்னிந்தியத் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

   

இந்நிலையில் இவருக்கும் ஃபர்ஹானுக்கும் கேரளா காவல் நிலையத்தில் வைத்து நடைபெற்ற திருமணம் ஏற்கனவே இணையத்தில் பேசுபொருளாகியிருந்தது. தற்போது பரவி வரும் காயமடைந்த வீடியோ வெறும் படப்பிடிப்புத் தளம் சார்ந்தது என்பதால் அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.