ட்ரம்ப் கொடுத்த கெடு… அதற்குள் ஈரான் தலைவருக்கு நேர்ந்த கதி.. யார் கையில் ஈரான் அதிகாரம்?… திடுக்கிடும் தகவல்கள்…!!!

By Rajeshwari on சித்திரை 7, 2026

Spread the love

ஈரானின் தற்போதைய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நினைவு இழந்த நிலையில் கோம் நகரில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள இந்த செய்திகளின்படி, அவர் மிக மோசமான உடல் நிலையில் இருப்பதாகவும், நாட்டின் எந்தவொரு முக்கிய முடிவுகளையும் எடுக்கும் நிலையில் அவர் இல்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் கடந்த பிப்ரவரி 28 அன்று அவரது தந்தை அலி கமேனி கொல்லப்பட்ட அதே வான்வழித் தாக்குதலில் மொஜ்தபா கமேனியும் படுகாயமடைந்ததாக நம்பப்படுகிறது. தற்போது அவர் கோம் நகரில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

   

இதனால் ஈரானில் போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில், நாட்டின் உச்ச தலைவர் செயலற்று இருப்பது அங்கு பெரும் அதிகார இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. மொஜ்தபா கமேனி பதவி ஏற்றது முதல் பொதுவெளியில் தோன்றாதது மற்றும் அவரது பெயரில் வெளியிடப்பட்ட உரைகள் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை என்ற சந்தேகங்கள் அவரது உடல்நிலை குறித்த வதந்திகளை உறுதிப்படுத்துவது போல் உள்ளன.

   

இந்நிலையில் ஈரான் அரசு அவர் நலமுடன் இருப்பதாகக் கூறி வந்தாலும், தற்போது வெளியாகியுள்ள உளவுத்துறை தகவல்கள் அதற்கு மாறாக உள்ளன. இதனால் ஈரானின் அடுத்தக்கட்ட நகர்வுகள் மற்றும் அதிகாரத்தைக் கையாளப்போவது யார் என்பது குறித்த கேள்விகள் உலக நாடுகளிடையே எழுந்துள்ளன