“பொம்பள பிள்ளையே வேண்டாம்” ஆண் பிள்ளை தான் வேணும்… அழகான இரட்டை குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற குடும்பம்… நாட்டையே அதிரவைத்த சம்பவம்..!!

By Soundarya on சித்திரை 7, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், நவீன காலத்திலும் நிலவும் பெண் சிசுக்கொலை எனும் கொடூர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தங்களுக்குப் பெண் குழந்தைகள் வேண்டாம், ஆண் குழந்தைதான் வேண்டும் என்ற வெறியில், பெற்ற தந்தை, தாத்தா மற்றும் மாமா ஆகிய மூவரும் இணைந்து தங்களின் இரட்டைப் பெண் குழந்தைகளைக் கிணற்றில் வீசிக் கொலை செய்துள்ளனர். ஒரு குழந்தை கிணற்றில் விழுந்தவுடனேயே உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தை தண்ணீரில் உயிருக்குப் போராடியுள்ளது.

தண்ணீரில் தத்தளித்த அந்தப் பிஞ்சு குழந்தையின் துடிப்பைக் கண்டும் மனமிரங்காத அந்தப் பாவித் தந்தை, கிணற்றில் இறங்கி அக்குழந்தையைத் தண்ணீருக்குள் அமிழ்த்தித் துடிக்கத் துடிக்கக் கொலை செய்துள்ளார். பெற்ற மகள்களையே எமனாக மாறி வேட்டையாடிய இந்த நயவஞ்சகத் தந்தையின் செயல் ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இரத்த உறவுகளே எமனாக மாறிய இந்தக் கொடூரக் குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர்.