“தோல்விக்கு நானே பொறுப்பு” பெங்களூருவிடம் பணிந்த சிஎஸ்கே… கேப்டன் ருதுராஜ் உருக்கம்…!!

By Soundarya on சித்திரை 6, 2026

Spread the love

ஐபிஎல் 2026 தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி நிர்ணயித்த 251 ரன்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திய சிஎஸ்கே அணியால் 207 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சிஎஸ்கே கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இந்தத் தோல்வி குறித்துப் பேசிய ருத்துராஜ், தோல்விக்குத் தானே முழுப் பொறுப்பேற்பதாகத் தெரிவித்துள்ளார். பேட்டிங்கில் தான் இன்னும் சிறப்பாகப் பங்களித்திருந்தால் போட்டியின் முடிவு வேறாக இருந்திருக்கும் என்றும், கேப்டனாகத் தான் சோபிக்கத் தவறியதே தோல்விக்கு முக்கியக் காரணம் என்றும் அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.