ஈரான் வான்பரப்பில் பறந்த அமெரிக்காவின் இரண்டு F-32 ரக போர் விமானங்கள் அதிரடியாகச் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலின் போது பாராசூட் மூலம் குதித்த இரண்டு அமெரிக்க விமானிகளில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மாயமான மற்றொரு விமானியைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. அந்த விமானியைப் பிடித்துத் தருபவர்களுக்குச் சிறப்பு வெகுமதி அளிக்கப்படும் என ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது இந்நிலையில், அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் C-130 ரக ராணுவப் போக்குவரத்து விமானத்தையும் ஈரான் ராணுவம் தற்போது சுட்டு வீழ்த்தியுள்ளது.
இந்த அடுத்தடுத்த தாக்குதல்கள் ஒருபுறம் இருக்க, ஈரானின் வான்வழித் தாக்குதலால் அபுதாபியில் உள்ள போரூஜ் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலை முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிவதால் அப்பகுதியே கரும்புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் போக்குவரத்து விமானம் வீழ்த்தப்பட்டதோடு, அபுதாபியில் உள்ள முக்கியத் தொழிற்சாலையும் இலக்கு வைக்கப்பட்டிருப்பது மத்திய கிழக்கு நாடுகளில் முழு அளவிலான போர் மூளும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
