“பெற்றோரை பாரமாக கருதும் பிள்ளைகளுக்கு இது ஒரு பாடம்”… 80 கோடிக்கு அதிபதி… ஆனால் இறுதிச்சடங்கு செய்ய பணம் இல்லை… கலியுக அவலம்…!!!

By Rajeshwari on சித்திரை 4, 2026

Spread the love

கலியுகத்தின் உச்சகட்ட கொடுமையை வெளிப்படுத்தும் வகையில், ஒரு நெஞ்சை உருக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கு அதிபதியான ஒரு முதியவர், கவனிப்பாரற்று முதியோர் இல்லத்தில் காலமானார். பல கோடி மதிப்பிலான சொத்துக்களும், அந்தஸ்தும் இருந்தபோதிலும், அவரது கடைசி நாட்களில் துணையாக இருக்கவோ அல்லது அவரது இறப்பிற்குப் பிறகு நேரில் வந்து பார்க்கவோ அவரது சொந்தப் பிள்ளைகளுக்கு மனமில்லை.

மேலும் பணத்தின் பின்னால் ஓடும் இந்த நவீன உலகில், ரத்த பந்தங்களுக்கு இடையே உள்ள பாசம் எவ்வளவு தூரம் சிதைந்து போயுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான சாட்சியாக அமைந்துள்ளது. பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில், அந்த முதியவரின் இறுதிச் சடங்குகளைச் செய்யக்கூட அவரது குடும்பத்தினர் முன்வரவில்லை.

   

இதனால் இறுதியில், அங்கிருந்த பொதுமக்களும் அக்கம்பக்கத்தினரும் சந்தா வசூலித்து, ஒரு அநாதையைப் போல அவருக்கு இறுதி மரியாதையைச் செய்தனர். கோடிக்கணக்கான பணம் இருந்தும், ஒரு மனிதனின் இறுதிப் பயணம் இவ்வளவு அனாதையாக அமைந்தது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “பெற்றோரை பாரமாக கருதும் பிள்ளைகளுக்கு இது ஒரு பாடம்” என மக்கள் தங்கள் வேதனையைப் பகிர்ந்து வருகின்றனர்.