அந்த ஊர் பக்கம் மட்டும் போயிடாதீங்க… ஆண்களை விழுங்கும் சாபம்?… ஒவ்வொரு வீட்டின் பின்னாலும் மறைந்திருக்கும் அந்த ரத்த சரித்திரம் தெரியுமா?..!!!

By Rajeshwari on சித்திரை 4, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாரா மாவட்டத்தில் உள்ள பாகூர் கிராமத்தைப் பற்றியது. இக்கிராமம் தற்போது ‘விதவைகளின் கிராமம்’ என்று அழைக்கப்படும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இங்குள்ள ஆண்கள் மிகக் குறைந்த வயதிலேயே உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

இதற்குக் காரணம் இப்பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத மற்றும் அபாயகரமான கனிமச் சுரங்கங்கள் ஆகும். வாழ்வாதாரத்திற்காக ஆண்கள் இந்தச் சுரங்கங்களில் வேலைக்குச் செல்கின்றனர், அங்கு வெளியேறும் நச்சுப் புகையும் தூசியும் அவர்களைச் சில ஆண்டுகளிலேயே தீராத சுவாச நோய்களுக்கு ஆளாக்குகின்றன.

   

இங்குள்ள பெரும்பாலான ஆண்கள் சிலிகோசிஸ் எனப்படும் கொடிய நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு, முப்பது அல்லது நாற்பது வயதிலேயே மரணத்தைத் தழுவுகின்றனர். இதன் விளைவாக, அநேக வீடுகளில் ஆண்கள் எவரும் உயிருடன் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

   

மேலும் வாழ்நாள் முழுவதையும் தனிமையில் கழிக்கும் பெண்கள், தங்கள் குழந்தைகளை வளர்க்கவும் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் பெரும் போராட்டத்தை எதிர்கொள்கின்றனர். அரசின் சில உதவிகள் கிடைத்தாலும், ஒரு தலைமுறை ஆண்களையே அழித்துக் கொண்டிருக்கும் இந்தச் சுரங்கத் தொழில் அப்பகுதி மக்களின் வாழ்க்கையை இருளில் ஆழ்த்தியுள்ளது.