ஆர்ப்பரித்து வந்த ஆறு திடீரென எங்கே போனது?… நம் கண் முன்னாலேயே பாறைகளுக்குள் ஆறு மறைகிறது… இணையத்தை அதிரவைக்கும் மாயாஜால காட்சி…!!!

By Rajeshwari on சித்திரை 4, 2026

Spread the love

சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, இயற்கையின் விந்தையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. உத்தரகண்ட் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு இடையே பாயும் சாரதா நதியின் ஒரு பகுதி, திடீரென பெரும் பாறைகளுக்கு அடியில் மாயமாய் மறையும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.

இதனால் ஆர்ப்பரித்து வரும் நதி நீர், ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள பாறைக் கூட்டங்களை நெருங்கியதும், திடீரென பூமிக்குள் இழுக்கப்படுவது போல மறைந்துவிடுகிறது. பாறைகளுக்கு மறுபுறம் நிலம் முற்றிலும் காய்ந்து காணப்படுவது பார்ப்பவர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட சில நாட்களிலேயே கோடிக்கணக்கான பார்வைகளைக் கடந்து இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

   

 

View this post on Instagram

 

A post shared by Aryan Gupta (@aryan____gupta__up__27)

   

“>

 

இந்த மர்மமான நிகழ்வைக் கண்டு மக்கள் திகைத்துப் போனாலும், இதற்குப் பின்னால் ஒரு தெளிவான அறிவியல் காரணம் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது பெரும்பாலும் ‘கார்ஸ்ட் நிலப்பரப்பு’ அல்லது நிலத்தடி நீரோட்ட அமைப்பினால் ஏற்படுகிறது.

மேலும் பாறைகளுக்கு அடியில் பெரிய அளவிலான குகைகள் அல்லது பாதாளக் குழாய்கள் போன்ற அமைப்புகள் இருக்கும்போது, மேல்பரப்பில் ஓடும் நீர் அப்படியே பூமிக்குள் இறங்கி நிலத்தடி ஆறாக மாறுகிறது. பார்ப்பதற்கு ஏதோ மந்திரம் போலத் தெரிந்தாலும், இது இயற்கையின் ஒரு புவியியல் செயல்பாடே ஆகும். இந்த வீடியோவை சிலர் போலி எனக் கூறினாலும், இது இயற்கையின் ஒரு அபூர்வமான மற்றும் உண்மையான நிகழ்வு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது