2026 சட்டமன்றத் தேர்தல்… திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஜாக்பாட்?… காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் பெரிய மாற்றம்? உண்மை பின்னணி என்ன?…!!!

By Rajeshwari on சித்திரை 3, 2026

Spread the love

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நீண்ட இழுபறிக்குப் பிறகு எட்டப்பட்ட இந்த உடன்பாட்டின்படி, கடந்த 2021 தேர்தலை விட 3 தொகுதிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதுடன், ஒரு மாநிலங்களவை (Rajya Sabha) இடமும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் வேட்பாளர் தேர்வில் சில தாமதங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள 28 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலில் பெரிய அளவிலான ஆச்சரியங்கள் ஏதுமில்லை என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இந்த வேட்பாளர் பட்டியலில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலேயே போட்டியிடுகிறார்.

   

இந்நிலையில் வேட்பாளர் தேர்வில் கோஷ்டி பூசல்கள் மற்றும் இழுபறிகள் நிலவியதால், டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுக் கூட்டத்திற்குப் பிறகே இந்தப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பான்மையான தொகுதிகளில் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், புதிய முகங்களுக்குக் குறைந்த அளவிலேயே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.