இணையதளங்களில் அவ்வப்போது நம்மை அதிரவைக்கும் வீடியோக்கள் வெளியாவதுண்டு. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் ஒரு ராட்சத ராஜநாகத்தைப் பிடித்து இழுத்து விளையாடுகிறார். அந்தப் பாம்பு அங்கிருந்து தப்பிக்க முயன்றாலும், அதன் வாலைப் பிடித்துத் தன் பக்கம் அந்த இளைஞர் மீண்டும் மீண்டும் இழுக்கிறார். ஏதோ வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியுடன் விளையாடுவது போல அவர் செய்யும் இந்தச் செயல் பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கிறது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த ராஜநாகம் தனது படத்தை விரித்து அந்த இளைஞரைத் தாக்க முற்படுகிறது. ஆனாலும், அந்த இளைஞரின் முகத்தில் எவ்வித பயமும் இல்லை. “எமன் பக்கத்தில் அமர்ந்திருப்பது போல இருக்கிறது” என்று நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பார்த்துக் கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘எடோ ஹன்சோ’ (Edo Hanzo) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
View this post on Instagram
ராஜநாகம் கடித்தால் உயிர் பிழைப்பது மிகவும் கடினம் என்று தெரிந்தும், இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடுவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “இது வீரம் அல்ல, முட்டாள்தனம்” என்றும், “அந்த வாயில்லா ஜீவனை எதற்கு இப்படித் துன்புறுத்துகிறீர்கள்?” என்றும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வைரலாக வேண்டும் என்பதற்காகத் தங்கள் உயிரையே பணையம் வைக்கும் இதுபோன்ற கலாச்சாரம் ஆபத்தானது என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
