ஆழ்வார்திருநகரி முதல் திருச்செந்தூர் வரை… ஓபிஎஸ் கோட்டையில் ஓட்டை போட்ட ஈபிஎஸ்… ஒரே மேடையில் களம் மாறிய பட்டாளம்….!

By Nanthini on சித்திரை 3, 2026

Spread the love

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்குத் திரும்புவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான டாக்டர் புவனேஸ்வரன், தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்;

அவருடன் ஆழ்வார்திருநகரி மற்றும் திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகளும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். உள்ளூர் அளவில் செல்வாக்கு மிக்க நிர்வாகிகள் வரிசையாகத் தாய் கழகத்திற்குத் திரும்புவது, தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் தரப்பிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுவதோடு, அவரது ஆதரவாளர்களிடையே கடும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.