தண்டவாளத்தில் மோதிக்கொண்ட இளைஞர்கள்… முல்லுண்டு ஸ்டேஷனில் நடந்த விபரீத சம்பவம்… மரண பயமே இல்லையா?… வைரல் வீடியோ..!!!

By Rajeshwari on சித்திரை 1, 2026

Spread the love

மும்பையின் முல்லுண்டு புறநகர் இரயில் நிலையத்தில் இரண்டு இளைஞர்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தில் இறங்கி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரயில்கள் அடிக்கடி வந்து செல்லும் பரபரப்பான தடம் என்பதை சற்றும் பொருட்படுத்தாமல், ஆவேசத்தில் தண்டவாளத்தில் குதித்த அந்த இளைஞர்கள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர்.

மேலும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், இரயில்வே விதிகளை மீறியும் அரங்கேறிய இந்த மோதல் சம்பவம் அங்கிருந்த பயணிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மோதலின் போது மற்ற பயணிகள் மேடையில் நின்றபடி அவர்களை எச்சரித்தும், அவர்கள் எதையும் காதில் வாங்காமல் சண்டையிடுவதிலேயே குறியாக இருந்தனர்.

   

 

View this post on Instagram

 

A post shared by Parivartan News (@parivartan_news)

   

“>

 

இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் இரயில்கள் ஏதும் வராததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது இரயில்வே பாதுகாப்புப் படை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொது இடங்களில் இதுபோன்ற அநாகரீகமான மற்றும் ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.