முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் வலதுகரமாகக் கருதப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், திமுகவிலிருந்து விலகி சசிகலா தலைமையிலான அஇபுதிமுக-வில் (AIADMK) இணைந்துள்ளார். கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி ஓபிஎஸ் உடன் இணைந்து திமுகவில் சேர்ந்த இவர், ஒரே மாதத்தில் அங்கிருந்து வெளியேறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திடீர் மாற்றத்தால் திமுக தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.
இதற்கிடையே, அய்யப்பனை உசிலம்பட்டி தொகுதி வேட்பாளராக சசிகலா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஓபிஎஸ்-ஐ நம்பி தான் ஏமாந்துவிட்டதாக அய்யப்பன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளராக இருந்த ஒருவர், தற்போது சசிகலா அணிக்குச் சென்று வேட்பாளராக மாறியிருப்பது தென் மாவட்ட அரசியலில் முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.
