45 வருஷத்துல நான் ஒரு பைசா லஞ்சம் வாங்குனது இல்ல…. இதுதான் எனக்கு கடைசி.. மேடையில் கண் கலங்கிய அமைச்சர் துரைமுருகன்..!!

By Soundarya on சித்திரை 1, 2026

Spread the love

தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திமுகவின் மூத்த தலைவருமான துரைமுருகன், தனது 45 ஆண்டுகால நீண்ட அரசியல் பயணத்தில் யாரிடமும் லஞ்சம் வாங்கியதில்லை என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். 1971-ஆம் ஆண்டு முதல் தான் போட்டியிடும் காட்பாடி தொகுதியைக் கோவிலாகவும், அங்குள்ள மக்களைத் தெய்வங்களாகவும் மதித்துத் தொண்டு செய்து வருவதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலே தனது கடைசித் தேர்தல் என்றும் அவர் அறிவித்துள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் காட்பாடி தொகுதி மக்களுக்குச் செய்ய வேண்டிய எஞ்சிய பணிகளை முழுமையாக முடித்துவிட்டு, அரசியலில் இருந்து விடைபெறப் போவதாக அவர் கூறியுள்ளார். மூத்த அரசியல்வாதியான அவரின் இந்த ஓய்வு அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.