பாகிஸ்தான் முகத்திரையை கிழித்த இஸ்ரேல்… சிறுபான்மையினரை வதைக்கும் பாகிஸ்தானுக்கு தர்ம அடி கொடுத்த இஸ்ரேல்… அதிரும் இணையதளம்..!!!

By Rajeshwari on பங்குனி 31, 2026

Spread the love

இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய வார்த்தைப் போர் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய இஸ்ரேலியப் பிரதிநிதிகள், பாகிஸ்தானை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளனர்.

மேலும் பயங்கரவாதத்தை வளர்ப்பதிலும், ஜிஹாதி குழுக்களுக்குப் புகலிடம் அளிப்பதிலும் பாகிஸ்தான் முன்னணியில் இருப்பதாகக் குற்றம் சாட்டிய இஸ்ரேல், அந்நாடு மற்ற நாடுகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதை விடுத்துத் தனது சொந்த நாட்டில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகளை முதலில் சரிசெய்ய வேண்டும் என்று பகிரங்கமாகச் சாடியுள்ளது. பாகிஸ்தானின் கடந்த காலச் செயல்பாடுகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடனான அதன் தொடர்புகளைச் சுட்டிக்காட்டிய இஸ்ரேல், “பயங்கரவாதிகளின் தாயகம்” என்று அந்நாட்டை வர்ணித்துள்ளது.

   

இதனால் இஸ்ரேலியத் தூதரக அதிகாரிகள் பேசுகையில், பாகிஸ்தான் தனது நாட்டில் சிறுபான்மையினரை நடத்தும் விதம் மற்றும் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது போன்ற செயல்களைச் செய்துகொண்டு, மனித உரிமைகள் குறித்துப் பேசுவது வேடிக்கையாக இருப்பதாகவும், இது அவர்களின் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டுவதாகவும் தெரிவித்தனர். இந்தத் தீவிரமான மோதல் சமூக ஊடகங்களிலும் செய்திகளிலும் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.