உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் பள்ளியில் ஆசிரியர்களால் அவமானப்படுத்தப்பட்டதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. அந்தச் சிறுமியின் ஆடைகள் மற்றும் சுகாதாரம் குறித்து வகுப்பறைக்கு முன்னால் ஆசிரியர்கள் கேலி செய்ததோடு, அவரை வகுப்பிற்குள் நுழைய விடாமல் தடுத்து அவமதித்துள்ளனர். பிஞ்சு மனதைக் காயப்படுத்தும் இந்த மனிதாபிமானமற்ற செயலால் மனமுடைந்த அந்தச் சிறுமி, ஆசிரியர்களின் கொடுமையைத் தாங்க முடியாமல் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
“Class 5 girl died by suicide.” 💔
School teachers in Kannauj, UP humiliated Class 5 girl over her clothes and hygiene and denied her entry to class.
She couldn’t bear this & died by suicide.
Why do teachers torture kids in the name of schooling? Listen to her sister. Awful! pic.twitter.com/3s0ZKEkJ93
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) March 31, 2026
கல்வி என்ற பெயரில் குழந்தைகளை மனரீதியாக வதைக்கும் ஆசிரியர்களின் போக்கு குறித்துப் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன. “பள்ளிக்குச் சென்ற என் தங்கை ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தாள்?” என அவரது சகோதரி கண்ணீர் மல்கக் கூறும் வாக்குமூலம் காண்போரை நிலைகுலையச் செய்கிறது. அன்பையும் நற்பண்புகளையும் கற்றுக்கொடுக்க வேண்டிய பள்ளிக்கூடமே ஒரு குழந்தையின் மரணத்திற்குத் தள்ளியிருப்பது, கல்வி முறையில் இருக்கும் கடுமையான ஓட்டைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
