சிவபெருமான் என்னை கூப்பிடுறார்… நான் போகிறேன்… கடிதம் எழுதிவைத்துவிட்டு வெளியேறிய மாணவி… கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்..!!

By Soundarya on பங்குனி 31, 2026

Spread the love

தெலங்கானா மாநிலத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், “சிவபெருமான் என்னை அழைக்கிறார், அவரைத் தேடிச் செல்கிறேன்” என உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மீகத் தேடலில் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய அந்த மாணவியின் கடிதத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாயமான மாணவியைக் கண்டுபிடிக்கப் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில், அவரது இந்த திடீர் முடிவுக்கான காரணங்கள் குறித்துப் பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்ட விசாரணையில், மாயமான மாணவி இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்தது போலீசாருக்குத் தெரியவந்துள்ளது. இதனால், குடும்பத்தினரின் சந்தேகத்தைத் திசைதிருப்பவும், தனது காதலனுடன் செல்வதை மறைக்கவும் ஆன்மீகப் பெயரைப் பயன்படுத்தித் திட்டமிட்டு கடிதம் எழுதி வைத்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பும் என்ற அச்சத்தில் அவர் இவ்வாறு செய்தாரா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பதை அறிய, மாணவியின் அலைபேசி அழைப்புகள் மற்றும் அவரது நண்பர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.