“85 வயதில் மீண்டும் ஒரு காலேஜ் டேஸ்…” பேரப்பிள்ளைகளுடன் வந்து அரட்டை அடித்த தாத்தாக்கள்… 1962 பேட்ச் மாணவர்களின் பாசப் போராட்டம்…!!

By Devi Ramu on பங்குனி 31, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் தார்வாட் வேளாண்மைக் கல்லூரியில் 1962-65 காலகட்டத்தில் பயின்ற மாணவர்கள், சுமார் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே வளாகத்தில் சந்தித்துக்கொண்ட நெகிழ்ச்சியான நிகழ்வு அரங்கேறியுள்ளது. அன்று 122 மாணவர்களாகப் பிரிந்தவர்களில், தற்போது 85 வயதைக் கடந்த 12 நண்பர்கள் மட்டும் முதுமையின் தளர்ச்சியையும் பொருட்படுத்தாமல் வாக்கிங் ஸ்டிக்குடன் இந்த ‘ரீ-யூனியனில்’ பங்கேற்றனர். தங்கள் குடும்பத்தினர் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வந்திருந்த அவர்கள், மூன்று நாட்கள் தங்கியிருந்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதோடு, மறைந்த நண்பர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தினர்.

வயது முதிர்ந்த நிலையிலும் உற்சாகம் குறையாமல் பாடியும் ஆடியும் மகிழ்ந்த இந்த நண்பர்கள், தங்களுக்குக் கல்வி போதித்த ஆசிரியர்களையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர். இந்த அரிய சந்திப்பை ஒருங்கிணைத்த வகுப்புத் தோழர் எஸ்.வி. முத்தள்ளி அவர்களுக்குச் சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டது. இளமைக்கால நட்பைப் புதுப்பித்துக்கொண்ட இவர்களது சங்கமம், இன்றைய தலைமுறை இளைஞர்களுக்குப் பிணைப்பு மற்றும் உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு பாடமாக அமைந்தது. காலச் சக்கரம் சுழன்றாலும் உண்மையான நட்புக்கு என்றும் வயதாகாது என்பதை இந்த முதியவர்களின் சந்திப்பு மெய்ப்பித்துக் காட்டியுள்ளது.