நான் தூக்கியெறிந்த 19 பேருக்கு திமுகவில் சீட்… அவங்களால எந்த பயனும் இல்ல… கடுமையாக சாடிய எடப்பாடி..!

By Soundarya on பங்குனி 31, 2026

Spread the love

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 19 பேர், தற்போது திமுக சார்பில் வரும் தேர்தலில் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கட்சியால் ஓரங்கட்டப்பட்டவர்களைத் திமுக வேட்பாளர்களாக அறிவித்திருப்பது குறித்துக் கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களால் எந்தப் பயனும் இல்லை என்றும், அவர்களை வைத்து திமுக அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நபர்களுக்குத் திமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்படுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.