“அமெரிக்காவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஈரான்”… 29 ஆயிரம் கோடி காலி… நடுங்கும் வல்லரசு….!

By Nanthini on பங்குனி 30, 2026

Spread the love

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த மூன்று வாரங்களில் அமெரிக்க ராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களால் அமெரிக்காவின் சுமார் 3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹29,000 கோடி) மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் சேதமடைந்துள்ளதாக ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்க பாதுகாப்புத்துறையின் முன்னாள் அதிகாரி எலைன் மெக்கஸ்கரும் உறுதிப்படுத்தியுள்ளார், இது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களான F-35 மற்றும் F-15E போன்றவை பலத்த சேதத்தைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, ஈராக் வான்வெளியில் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஆறு வீரர்கள் உயிரிழந்தது அமெரிக்க ராணுவத்திற்குப் பேரிடியாக அமைந்துள்ளது. மேலும், சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து KC-135 ரக எரிபொருள் நிரப்பும் விமானங்கள் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்து தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருகின்றன.

   

அமெரிக்காவின் கண்கள் என்று போற்றப்படும் MQ-9 ரீப்பர் (MQ-9 Reaper) வகை உளவு டிரோன்கள் 12-க்கும் மேற்பட்டவை இந்த மோதலில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. இது அமெரிக்காவின் உளவுத் திறனைப் பெருமளவு பாதித்துள்ளது. இதுமட்டுமின்றி, சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களில் எதிரிகளின் தாக்குதலை முன்கூட்டியே கண்டறியும் ரேடார் அமைப்புகளும் ஈரானின் தாக்குதலுக்கு இலக்காகிச் சிதைந்துள்ளன.

   

கடல்சார் பாதுகாப்பிலும் அமெரிக்காவிற்குச் சவால்கள் அதிகரித்துள்ளன. கிரீஸ் நாட்டின் சூடா விரிகுடாவில் நிறுத்தப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல்களில் ஒன்றான ‘யுஎஸ்.எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு’ (USS Gerald R. Ford) கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து, ஏற்கனவே இழப்பில் தவிக்கும் அமெரிக்காவிற்கு மேலதிக நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இந்தத் தொடர் இழப்புகள் வல்லரசு நாடான அமெரிக்காவின் ராணுவ பலத்திற்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது.