இந்த வழித்தட மாற்றம் காரணமாக கப்பல்களின் பயண நேரம் அதிகரிப்பதோடு, எரிபொருள் செலவு மற்றும் காப்பீட்டுக் கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன. இது உலக சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனால் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் பதற்றங்கள் ஏற்கனவே எரிசக்தி விநியோகத்தைப் பாதித்துள்ள நிலையில், ‘கண்ணீர் வாசல்’ பகுதியில் நிலவும் இந்த உறுதியற்ற சூழல் உலகளாவிய வர்த்தகச் சங்கிலியை மேலும் நிலைகுலையச் செய்துள்ளது. கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச நாடுகள் கைகோர்த்தாலும், இப்பகுதியில் நிலவும் புவிசார் அரசியல் சிக்கல்கள் கப்பல் போக்குவரத்துத் துறைக்குத் தொடர்ந்து கண்ணீரை வரவழைக்கும் சவாலாகவே நீடிக்கிறது.
