உத்தரப்பிரதேசத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு பெண்ணின் வங்கித் கணக்கில் சுமார் 10 கோடி ரூபாய் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது வங்கிக் கணக்கில் இவ்வளவு பெரிய தொகை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், ஒரு ரூபாய் கூட எடுக்காமல் நேர்மையைக் கடைப்பிடித்தார். “இது என்னுடைய பணம் இல்லை, இதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று உடனடியாக வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.
தவறுதலாக வந்த பணத்தை ஆசைப்பட்டுத் தன்வசப்படுத்திக் கொள்ளாமல், உடனடியாகத் தகவல் தெரிவித்த அந்தப் பெண்ணின் நேர்மை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, இணையவாசிகளும் அவருக்குத் தங்களது பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர். பேராசைப்படாத அவரது இந்த உயர்ந்த குணம், பலருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.
