இவனுங்க திருந்தவே மாட்டாங்களா..? ரயிலில் தனியாக இருந்த பெண்.. விடாமல் துரத்திய ‘காமக் கண்கள்’… வைரலாகும் பகீர் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்..!!

By Soundarya on பங்குனி 29, 2026

Spread the love

வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ் (Vanchinad Express) ரயிலில் தனியாகப் பயணம் செய்த இளம்பெண் ஒருவரை, மர்ம நபர் ஒருவர் அநாகரீகமாக வெறித்துப் பார்த்து (Ogling) தொல்லை கொடுத்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயிலின் அந்தப் பெட்டியில் பயணிகள் யாரும் இல்லாத சூழலைத் சாதகமாக்கிக் கொண்ட அந்த நபர், அந்தப் பெண்ணையே இடைவிடாமல் உற்றுப் பார்த்து அவரை மிகுந்த அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

தன்னைப் பின் தொடர்வது போலவும், தவறான நோக்கத்தில் பார்ப்பது போலவும் உணர்ந்த அந்தப் பெண், தைரியமாகத் தனது மொபைல் போனில் அந்த நபரின் செயலைப் பதிவு செய்துள்ளார். “இதுதான் யதார்த்தம்” என்ற தலைப்புடன் பகிரப்பட்ட அந்த வீடியோவில், அந்த நபர் அந்தப் பெண்ணை ஒருவித அச்சுறுத்தும் பார்வையுடன் பார்ப்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது. அந்தப் பெண் அங்கிருந்து நகர முயன்றபோதும் அந்த நபரின் பார்வை மாறாதது காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

   

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பு குறித்த அச்சம் மீண்டும் எழுந்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் அந்த நபரின் முகத்தை அடையாளம் கண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே காவல்துறைக்கும் (RPF), அமைச்சகத்திற்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒரு பொது இடத்தில், அதுவும் ரயிலில் ஒரு பெண் இவ்வளவு பாதுகாப்பற்ற நிலையை உணர நேரிட்டது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.