ஷாக் நியூஸ்… இனி பெட்ரோல் பங்க் போனாலே சரக்கு கிடைக்குமா?… இந்தியாவிலேயே முதன்முறையாக சண்டிகரில் வினோத மாற்றம்…!!!

By Rajeshwari on பங்குனி 28, 2026

Spread the love

சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் புதிய மதுபானக் கொள்கையின்படி, இனி பெட்ரோல் பங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் மது விற்பனை செய்ய அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அதிரடி மாற்றத்தின் மூலம், பொதுமக்கள் மது வாங்குவதற்கு வழக்கமான மதுபானக் கடைகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று சண்டிகர் துணை ஆணையர் நிஷாந்த் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறிப்பாக, பாரம்பரிய மதுக்கடைகளுக்குச் செல்லத் தயங்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் எளிதாக மதுபானம் வாங்குவதற்கு இந்த புதிய நடைமுறை வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடங்களில் மது விற்பனை செய்வதற்கு அரசு சில கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. ஆண்டுக்கு 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஜிஎஸ்டி வருவாய் ஈட்டும் வணிக நிறுவனங்கள் மட்டுமே மது விற்பனைக்கான உரிமத்தைப் பெற தகுதியுடையவை.

   

மேலும், மதுபானக் கடைகள் செயல்படும் நேரம் நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்திற்கு இணங்க மது விற்பனை முறையை நவீனப்படுத்துவதும், அரசுக்கான வருவாயைப் பெருக்குவதுமே இந்தப் புதிய கலால் கொள்கையின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன.