தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கோயில் பூச்சொரிதல் விழாவின் போது நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக லோடு ஆட்டோ வாகனத்தில் பூக்களை ஏற்றிச் சென்றபோது, கண்டியூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது மாணவி ரக்க்ஷிதா அந்த வாகனத்தில் அமர்ந்திருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டர் இன்ஜினில் மாணவியின் தலைமுடி சிக்கியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மாணவியை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
