“அப்பாவை கொன்றது போல் உன்னையும்…” கண்டித்த கணவரை தீர்த்து கட்டிய மனைவி… 3 மாதம் கழித்து அம்பலமான உண்மை…!!

By Devi Ramu on பங்குனி 28, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் கல்யாணதுர்கம் பகுதியில், ஹனுமந்தராயுடு என்ற 43 வயது நபர் தனது மனைவி சுகன்யா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், சுகன்யாவுக்கு ஏற்பட்ட கள்ளத்தொடர்பு காரணமாகத் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு கணவர் இதனைக் கண்டித்தபோது, ஆத்திரமடைந்த சுகன்யா பாறாங்கல்லால் தாக்கி அவரைக் கொலை செய்துள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல் கணவரின் உடலை வீட்டின் பின்புறத்திலேயே புதைத்துவிட்டு, எதற்கும் கலங்காமல் அங்கேயே வசித்து வந்துள்ளார்.

இந்தக் கொடூரச் செயலை நேரில் கண்ட அவரது மகள் அம்ருதாவை, “வெளியில் சொன்னால் உன்னையும் கொன்றுவிடுவேன்” எனச் சுகன்யா மிரட்டி வைத்துள்ளார். ஆனால், சமீபத்தில் தாய்க்கும் மகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், அம்ருதாவையும் சுகன்யா கொலை செய்ய முயன்றுள்ளார். அதிலிருந்து தப்பி ஓடிய அந்தச் சிறுமி, தனது தந்தையின் சொந்த ஊருக்குச் சென்று உறவினர்களிடம் நடந்த உண்மைகளைக் கூறியுள்ளார். இதையடுத்து சுகன்யா காவல் நிலையத்தில் சரணடைய, போலீசார் புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.